ETV Bharat / bharat

பசுமை வழியில் 'இந்திய கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்' - Operations of the Indian Navy with a Green Footprint

பசுமை வழியில் இந்தியக் கடற்படையின் இயக்க முறைகள் என்ற நோக்கத்திற்கு இணையாக, ஓர் விரிவான ‘இந்திய கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை' கடற்படை செயல்படுத்தவுள்ளது.

Operations of the Indian Navy with a Green Footprint

author img

By

Published : Jun 5, 2021, 6:24 PM IST

டெல்லி: கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எழிமலாவில் உள்ள இந்தியக் கடற்படை மையத்தில் 3 மெகா வாட் திறன் கொண்ட பிரம்மாண்ட சூரிய சக்தி ஆலையை இந்தியக் கடற்படை உருவாக்கியது.

இதைத்தொடர்ந்து, மும்பையின் கராஞ்சா கடற்படைத் தளத்தில் 2 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு சூரிய சக்தி ஆலை நிறுவப்பட்டது. இதன்மூலம் கடற்படைத் தளங்களில் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி ஆலைகளின் மொத்த அளவு 11 மெகாவாட்டாக உள்ளது.

கணினி வாயிலாக கண்காணித்து, இயக்கப்படும் வகையிலான நவீன சூரிய ஒளிக்கதிர் தடம் அறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி இயக்கத்தின் நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் முயற்சியில், சூரிய சக்தி ஒளிமின்னழுத்தத்தை நிறுவவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.

ஆண்டுக்கு 630 டன் கரியமில வாயுவைக் குறைக்கும் முயற்சியில் முந்தைய ஆண்டு 30,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ‘உலக நதிகள் தினத்தை' முன்னிட்டு வெந்துருத்தி கால்வாய் அருகே கேரள வனத்துறையுடன் இணைந்து, தெற்குக் கடற்படைத் தலைமை, ஓர் சதுப்புநில காடுகளை உருவாக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தெற்கு கடற்படைத் தலைமையகமும் ஐஎன்எஸ் வெந்துருத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு அரசு துறையில் (பாதுகாப்பு) உயரிய தங்கமயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருதை இந்தத் தளம் வென்றது.

சர்வதேச கடலோர தூய்மை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கோவிட்- 19 நெறிமுறைகளைப் பின்பற்றி கடற்படைப் பிரிவுகள், கடலோரப் பகுதிகளில் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.