கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்டாி மாத பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கோவில் நடையை தந்தரி கண்டறு ராஜு வரடு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தீபாதாரணை காட்டி திறந்து வைத்தார்.
இன்று முதல் 21ஆம் தேதி வரை தினந்தோறும் பல்வேறு அபிஷேகங்கள் , விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. 21ஆம் தேதி இரவு 10 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் எனவும் , இடைப்பட்ட நாட்களில் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்