ETV Bharat / bharat

"ChatGPT Plus" சேவை இந்தியாவுக்கு வந்தாச்சு... கட்டணம் எவ்வளவு தெரியுமா? - கட்டணம் எவ்வளவு தெரியுமா

செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.

சாட் ஜிபிடி பிளஸ் சேவை அறிமுகம்
சாட் ஜிபிடி பிளஸ் சேவை அறிமுகம்
author img

By

Published : Mar 17, 2023, 7:27 PM IST

டெல்லி: எந்த ஒரு பொருள் குறித்தும், வாடிக்கையாளர் சேவை பற்றியும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாட்ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி பதில்களை வழங்கி வருகிறது. எந்தக் கேள்விகளை கேட்டாலும் பல்வேறு தலைப்புகளில், விரைவாக பதில்களைத் தரும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், இணைய உலகில் புதிய மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இதுவரை GPT 3.5 செயலியைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இதன் தரம் உயர்த்தப்பட்டு, அடுத்தகட்ட வெர்ஷன் இணைய உலகில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி பிளஸ் எனப்படும் GPT 4 ரக செயலியை ஓபன் ஏஐ நிறுவனம் அண்மையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. இன்று (மார்ச் 17) முதல் இந்த சேவையை இந்தியாவிலும் பெறலாம் என ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”சிறந்த செய்தி! சாட்ஜிபிடி பிளஸ் சேவை தற்போது இந்தியாவிலும் கிடைக்கும். இன்றே பயன்பாட்டைத் தொடங்குங்கள்”எனக் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு கட்டணம்?: "சாட்ஜிபிடி பிளஸ்" என்ற புதிய சப்ஸ்கிரிப்ஷனை பெற மாதம்தோறும் 20 டாலர்கள் (ரூ.1,652) செலுத்த வேண்டியிருக்கும். பயனாளர்கள் chat.openai.com என்ற இணையதளத்துக்குள் சென்றவுடன், Upgrade to Plus என்ற ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும். அப்போது இந்த ஆப்ஷனின் பயன்களை திரையில் காட்டும். பின்னர் Upgrade plan பட்டனை க்ளிக் செய்து, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

என்னென்ன பயன்கள்?: முந்தைய செயலியை விட தரம் உயர்த்தப்பட்ட இந்த செயலி, கூடுதல் வேகத்துடன் செயல்படும். இதற்கு முன் வெளியான GPT-3, GPT-3.5 போல் இல்லாமல், இப்புதிய GPT-4 செயலியானது இமேஜ் வடிவ கோப்புகளையும், அதில் உள்ள படங்களையும் புரிந்து கொள்ளும். புகைப்படத்தில் உள்ள வார்த்தைகளை மொழிப்பெயர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு.

இலவசமாக கிடைக்குமா?: ChatGPT-4 மற்ற மாடல்களை விட மெதுவாக உள்ளது. ஆனால், தேடல்களுக்கு அது கொடுக்கும் பதில்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் இருப்பதாக அதன் பயனர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் Bing பயனராக இல்லாவிட்டால், சமீபத்திய ChatGPT-4 வெர்சனை இலவசமாகப் பெற தற்போது எந்த வழியும் இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம், சமீபத்தில் ChatGPT தாய் நிறுவனமான OpenAI-ல் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தது. இதனால், AI-ன் சமீபத்திய பதிப்பின் மூலம் சாட்போட் இயங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாட்டில் யானை தாக்கி 1,581 பேர் உயிரிழப்பு - மத்திய அரசு

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த மேஜர் ஜெயந்துக்கு ராணுவப் பணியிடத்தில் இறுதி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.