பிகார் அரசியலில் மூத்த தலைவரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வானின் மகன், சிரக் பாவானுக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அண்மையில் தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த நிலையில், கட்சிச் தலைமையை சிரக் பாஸ்வான் ஏற்றார்.
சிரக் பாஸ்வான் தலைமைக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் உள்ளிட்ட ஐந்து எம்.பி.க்கள் கட்சியைவிட்டு வெளியேறினர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
பாஜகவே முடிவு செய்யட்டும்
அரசியல் நெருக்கடி குறித்து பேசிய சிரக் பாஸ்வான், "நான் இப்போதும் பாஜக கூட்டணியில்தான் உள்ளேன். அக்கட்சியின் அனைத்து கொள்கைகளுக்கும் துணை நிற்கிறேன். எனவே, வருங்காலத்தில் என்னை ஆதரிப்பதா அல்லது நிதீஷ் குமாரை ஆதரிப்பதா என்பதை பாஜகவே முடிவு செய்யட்டும்.
நான் நம்பிருந்தவர்களே முதுகில் குத்திய பின் இந்த நீண்ட அரசியல் போராட்டத்திற்கு நான் தயராகவுள்ளேன். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த இறுதிமுடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆறு நாள்களில் 3.77 கோடி தடுப்பூசிகள் - பிரதமர் மோடி மகிழ்ச்சி