காக்கிநாடா (ஆந்திரா): கடந்த 16 நாள்களுக்கு முன் மாவட்டத்தின் 6 கிராமப் பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனால், அங்குள்ள 6 கிராம மக்கள் மக்கள் பீதியில் உள்ளனர். இதையடுத்து 150 வனத்துறையினர் வங்கப்புலியை காட்டுக்குள் துரத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பிரதிபாடு பகுதிக்குள்பட்ட உள்ள ஓமங்கி கிராமம் அருகே 2 எருமை மாடுகளை புலி வேட்டையாடியது. அடுத்த ஐந்து நாள்களுக்கு புலியின் அடையாளங்கள் தெரிந்தன. அன்றிலிருந்து 6 கிராமங்களில் சுற்றித் திரிந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது. புலியை காட்டுக்குள் துரத்தவதற்கு வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
கடந்த மே 27ஆம் தேதி, காலை வனத்துறையினர் வைத்த கூண்டைப் பார்த்துவிட்டு ஒதுங்கிச் சென்ற காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது, பொடுலூரி மாங்கா, கொடுருபாக பாண்டவுலபாலம், சரபவரம் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள 15 கிலோமீட்டர் வரையிலான வனப்பகுதியில் புலி நடமாடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
புலி நடமாட்டத்தால், மே 23 முதல் 6 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வந்தவர்கள் அப்பணிகளை பாதியில் நிறுத்தியுள்ளனர். கால்நடை மேய்ப்பவர்கள் மேய்ச்சலுக்கு செல்லாமல் கால்நடைகளுடன் தவித்துவருகின்றனர். கூலி வேலைக்காக செல்பவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
வெளியே செல்வதாக இருப்பின், மூன்று மூன்று பேராகச் சென்று ஒன்றாக வெளியில் வந்து செல்கின்றனர். எனவே, வனத்துறையினர் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள புலியை விரைந்து பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக 150 வனத்துறை அலுவலர்கள் புலியைத் துரத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவில் திருவிழாவில் ராட்டின அச்சாணி உடைந்து விபத்து; அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!!