குஜராத்: வதோதரா வத்சர் பகுதியில் உள்ள ஜெய் அம்பே குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணை ஷாருக் பதான் என்ற இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் வீட்டார் வேறு ஒரு நபரை பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், காதலிக்கு திருமணம் செய்து வைத்தாலும் ஆத்திரமடைந்த ஷாருக் பதான் பெண்ணின் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார்.
காதலியின் வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்ததும் காதலியின் மாமியார் வெளியே வந்ததும், கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் ஷாரூக் அங்கிருந்து தப்பி சென்றார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வதோதாரா போலீஸார், துரிதமாக செயல்பட்டு ஷாருக்கை கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க:பெங்களூரில் நட்சத்திர ஆமைகள் விற்க முயன்ற கும்பல் கைது...