டெல்லி: கடந்த டிசம்பர் 2ஆம் தேதி கர்நாடகத்தில், இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வெளிநாடு செல்லாத மயக்கமருந்து மருத்துவருக்கு ஒமைக்ரான் வந்தது எப்படி என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத் ஜம்நகர் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதை குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
இதையடுத்து, மகாராஷ்டிரா டாம்பிவள்ளியில், தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்த 33 வயது இளைஞர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று நேற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. அதில், ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவரிடம் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தி, மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!