ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மற்றும் பாரமுல்லாவில் இன்று (ஜூன் 21) நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் சோபோர் துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மஜித் நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் சப்-இன்ஸ்பெக்டர் ஃபரூக் மிர் கொலையில் தொடர்புடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இரண்டு இடங்களில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
#SoporeEncounterUpdate: 01 terrorist killed. #Operation in progress. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/ZXhXuEKNh6
— Kashmir Zone Police (@KashmirPolice) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SoporeEncounterUpdate: 01 terrorist killed. #Operation in progress. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/ZXhXuEKNh6
— Kashmir Zone Police (@KashmirPolice) June 21, 2022#SoporeEncounterUpdate: 01 terrorist killed. #Operation in progress. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/ZXhXuEKNh6
— Kashmir Zone Police (@KashmirPolice) June 21, 2022
இதையும் படிங்க: மத்தியப்பிரதேசத்தில் பெண் நக்சல் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை