ETV Bharat / bharat

டெல்லியில் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி!

டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

டெல்லியில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

author img

By

Published : Jun 23, 2022, 10:29 PM IST

டெல்லி: ரோகினி பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று(ஜூன் 23) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறை அலுவலர்கள் கூறுகையில், 'ஒரு அடித்தளம், தரை தளம் மற்றும் நான்கு மேல் தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் கிடைத்த மூன்று மணிநேரத்தில் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

அடித்தளம், தரை தளம் மற்றும் முதல் தளம் ஆகிய இடங்களில் ஷூ உற்பத்தி மற்றும் சேமிப்பு யூனிட்கள் இருந்தன. மீதமுள்ள மேல் தளங்கள் குடியிருப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆறு பேர் மீட்கப்பட்ட நிலையில் அஜய் என்பவர் உயிரிழந்துள்ளார். இவரின் உடல் கட்டடத்தின் தரை தளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது' என தீயணைப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் 25 பேரை கடித்த தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.