குல்லு: ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணிகர்ன் பள்ளத்தாக்கில் உள்ள சோஜ் கிராமத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இன்று(ஜூலை 6) அதிகாலையில் மேகவெடிப்பால் திடீரென பெருமழை பெய்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வாகனங்கள் மற்றும் விலங்குகளும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே தஞ்சமடைந்துள்ளனர்.
சோஜ் கிராமத்திற்கு செல்லும் பாலமும் சேதமடைந்தது. இதனால் மீட்புப்படை வீரர்கள் கிராமத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நுபுர் ஷர்மா 'தலையை துண்டிக்க பரிசு' அறிவித்த மதகுரு கைது