துபாய்: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது எடிஷன் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலக கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள 10 நகர மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் முதல் ஆட்டமாக அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: உலகமே உற்று நோக்கும் உலக செஸ் கோப்பை: இறுதி யுத்தத்தில் வென்று சாம்பியன் ஆவாரா பிரக்ஞானந்தா?
முன்னதாக ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட முதல் கட்ட அணியை செப்டம்பர் 28ஆம் தேதி முன்னதாக ஒவ்வொறு நாடும் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உலக கோப்பைக்கான மாற்றுதல் பெற்ற அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.
-
🔟 mouth-watering clashes 🤩
— ICC (@ICC) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The schedule for the #CWC23 warm-up fixtures has been released!
More 👉 https://t.co/KdlrmlIelR pic.twitter.com/BVKcH8erWx
">🔟 mouth-watering clashes 🤩
— ICC (@ICC) August 23, 2023
The schedule for the #CWC23 warm-up fixtures has been released!
More 👉 https://t.co/KdlrmlIelR pic.twitter.com/BVKcH8erWx🔟 mouth-watering clashes 🤩
— ICC (@ICC) August 23, 2023
The schedule for the #CWC23 warm-up fixtures has been released!
More 👉 https://t.co/KdlrmlIelR pic.twitter.com/BVKcH8erWx
இந்நிலையில், பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று (ஆகஸ்ட். 23) வெளியிட்டு உள்ளது. இந்த பயிற்சி ஆட்டம் ஹைதரபாத், திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய 3 நகரங்களில் நடைபெறுகின்றன. மேலும், எல்லா ஆட்டங்களும் பகல் - இரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன. ஆட்டத்தின் போது 15 வீரர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என ஐசிசி தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யார்? டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதல்!
இந்திய அணி முதல் கட்டமாக செப்டம்பர் 30ஆம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியுடன் கவுகாத்தி மைதானத்தில் மோதுகிறது. இரண்டாவதாக அக்டோபர் 3ஆம் தேதி நெதர்லாந்து அணியை திருவணந்தபுரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணிக்குரிய பயிற்சி அட்டம் இரண்டுமே ஹைதரபத்தில் நடக்கிறது.
முதலில் நியூசிலாந்து அணியையும், இரண்டாவதாக ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. வங்கதேசம் - இலங்கை, தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா - நெட்தர்லாந்து, இங்கிலாந்து - வங்கதேசம், நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் - இலங்கை ஆகியவை மற்ற பயிற்சி ஆட்டங்களும் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: Ind Vs Ire 3rd T20 : வருண பகவான் திருவிளையாடல்.. இந்திய அணிக்கு சாதகமே!