டெல்லி: இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி 88 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு எதிராக ஒரு கோடிக்கு மேற்பட்டோர் (1,00,64,032) தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாடு முழுவதும் 62 கோடி டோஸ்களுக்கும் மேலாக பயனர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு கோடிக்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
Record vaccination numbers today!
— Narendra Modi (@narendramodi) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Crossing 1 crore is a momentous feat. Kudos to those getting vaccinated and those making the vaccination drive a success.
">Record vaccination numbers today!
— Narendra Modi (@narendramodi) August 27, 2021
Crossing 1 crore is a momentous feat. Kudos to those getting vaccinated and those making the vaccination drive a success.Record vaccination numbers today!
— Narendra Modi (@narendramodi) August 27, 2021
Crossing 1 crore is a momentous feat. Kudos to those getting vaccinated and those making the vaccination drive a success.
இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நடத்துபவர்களுக்கும் பாராட்டுக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல உள்துறை மந்திரி அமித்ஷா, ‘இந்தியாவில் ஒரே நாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை புதிய இந்தியாவின் வலுவான மற்றும் மகத்தான ஆற்றலின் பிரதிபலிப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.