திருவனந்தபுரம்: கார்த்யாயனி அம்மா ( 101) இன்று (அக்.11) உயிரிழந்தார். கார்த்யாயனி அம்மா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தொடங்கப்பட்ட எழுத்தறிவு இயக்கத்தின் "அக்ஷர லட்சம்" திட்டத்தின் கீழ் 40,000 பேர் எழுதிய தேர்வில் 98 சதவீத மதிப்பெண்களுடன் தனது 96வது வயதில் முதலிடம் பிடித்தார்.
இவருக்கு மத்திய அரசு “நாரி சக்தி விருது” வழங்கி சிறப்பித்தது. மேலும், கார்த்யாயனி அம்மா 53 உறுப்பு நாடுகளுக்கு இடையே தொலைதூரக் கல்வியை மேம்படுத்துவதற்கான நல்லெண்ணத் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்த்யாயனி அம்மா, அக்ஷர லட்சம் திட்டம் மூலம் படித்த பின், கணிணி பற்றி படிக்க விருப்பப்பட்டார்.
உடனே, முன்னாள் கேரள கல்வி அமைச்சர் ரவீந்தரநாத், கார்த்யாயனி அம்மாவுக்கு மடிக்கணிணியை இலவசமாக வழங்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு கார்த்யாயனி அம்மா பிரதமர் மோடியைச் சந்தித்தார். கடந்த குடியரசு தின அணிவகுப்பில் கார்த்யாயனி அம்மாவின் நாரி சக்தி விருதும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருமணமான பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க அனுமதித்த உத்தரவை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!