ETV Bharat / bharat

பாத்திரங்களை திருடியதற்காக தாக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 12, 2022, 5:42 PM IST

கேரளாவில் பாத்திரங்களை திருடியதற்காக தாக்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

old-man-tied-and-beaten-up-over-theft-dies-in-kerala

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சிரையின்கீழு பகுதியில் மே 28ஆம் தேதி முதியவர் ஒருவர் பாத்திரங்களை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தப்போது மாட்டிக்கொண்டார். இவரை ஊர் மக்கள் சரமாரியாக அடித்து, உதைத்து, கட்டி வைத்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், போலீசர் முதியவரை மீட்டபோது அவர் மயக்க நிலையில் இருந்தார். இதனால் அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இதனிடையே ஊர் மக்கள் அவர் மீது கொடுத்தப் புகாரை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் இன்று (ஜூன் 12) முதியவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், முதியவரின் வயிறு, குடல் பகுதியில் ஏற்பட்ட சேதம் காரணமாக உணவு உண்ண முடியாமல் சிரமப்பட்டுவந்தார். இதனாலேயே உயிரிழந்தார். இந்த பாதிப்புகளுக்கு அவர் தாக்கப்பட்டதுதான் காரணமா அல்லது ஏற்கனவே பாதிப்பு இருந்ததா என்பது உடற்கூராய்வின் முடிவிலேயே தெரியவரும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மனைவி கண்முன்னே சுட்டுக்கொலை... பஞ்சாப்பில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.