ETV Bharat / bharat

Odisha Train Accident: பயணிகளின் அலறல் சத்தம்! ஒடிசா ரயில் விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ - ஒடிசா ரயில் விபத்து வீடியோ

ஒடிசாவில் நாட்டையே உலுக்கிய மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தின் போது ரயிலின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Video capturing moment of crash inside Odisha train surfaces

author img

By

Published : Jun 8, 2023, 7:28 PM IST

Updated : Jun 8, 2023, 7:41 PM IST

ஒடிசா ரயில் விபத்தின் போது பதிவான வீடியோ

ஹைதராபாத்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2 ஆம் தேதி நடந்த மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 1,100 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரயில் விபத்து நிகழ்ந்த சமயத்தில் ரயிலின் உள்ளே பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ரயிலின் உள்ளே தூய்மைப் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு உள்ளார். பிற பயணிகள் சகஜமாக அவரது இருக்கைகளில் அமர்ந்தும், படுத்தும் உள்ளனர். அப்பொழுது திடீரென பதிவாகிக் கொண்டிருந்த வீடியோ ஆடுகிறது. பின்னர் வீடியோ முழுவதும் இருள் சூழ்ந்து விடுகிறது. அதன் பின்னர் பயணிகளின் அலறல் சத்தம் பயங்கரமாக ஒலிக்கிறது. அத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

ஏற்கனவே ரயில் விபத்தில் சிக்கி காயங்களுடன் தப்பிப் பிழைத்தவர்கள் விபத்தில் தாங்கள் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், தற்போது விபத்து நிகழ்ந்த சமயத்தில் ரயிலின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ வலைத்தளங்களில் பரவி காண்போர் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

இதையும் படிங்க: ரூ.2,100 கோடியில் நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனை.. ஹைதராபாத்தில் கட்ட கேசிஆர் திட்டம்!

Last Updated : Jun 8, 2023, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.