புவனேஸ்வர்: கோடை காலத்தில் கிராமப் புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அவர் அளித்துள்ள உத்தரவில், “நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகத்தில் அரசு பெரும் முதலீடுகளை செய்து வருகிறது.
கிராமப்புறங்களுக்கு ரூ.17,000 கோடி மதிப்புள்ள 89 மெகா திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீத குழாய் நீர் வழங்கல் இணைப்பை உறுதி செய்வதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நகர்ப்புறங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ .3.8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளோம், மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகர்ப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் வழங்கல் வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு, கோடை காலம் ஆரம்பத்தில் வந்துவிட்டது, வழக்கத்தை விட வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் முறையான நீர் விநியோகத்தை உறுதி செய்ய நாங்கள் சிறப்பாக தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்வழங்கலில் பிரச்சினைகள் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளை வரைபடமாக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதை உறுதி செய்யவும் முதலமைச்சர் அலுவலர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பாசிசி சக்திகள், திமுக சந்தர்பவாத அரசியலில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் - ஓவைசி பேச்சு