புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை (ஜூன் 4) மாநிலத்தில் உள்ள சபாநாயகர் உள்பட அமைச்சர்கள் 20 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தற்போது புதிய அமைச்சரவை காலை 11.45மணிக்கு பதிவியேற்கவுள்ளது. இதில் பல்வேறு புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நேரடி தேர்வு ஆகும். அந்த எம்.எல்.ஏ.க்கள் முறையே,
- ஜகன்னாத் சரகா
- நிரஞ்சன் பூஜாரி
- ரணேந்திர பிரதாப் ஸ்வைன்
- பிரமிளா மல்லிக்
- உஷா தேவி
- பிரபுல்ல குமார் மல்லிக்
- பிரதாப் கேசரி தேப்
- அதானு சப்யசாச்சி நாயக்
- பிரதீப் குமார் அமத்
- நபா கிசோர் தாஸ்
- அசோக் சந்திர பாண்டா
- துகுனி சாஹு
- ராஜேந்திர தோலாகியா
- சமீர் ரஞ்சன் தாஷ்
- அஷ்வினி குமார் பத்ரா
- பிரிதிரஞ்சன் கதேய்
- ஸ்ரீகாந்த சாஹு
- துஷர்கந்தி பெஹெரா
- ரோஹித் பூஜாரி
- ரீட்டா சாஹு
- பசந்தி ஹெம்ப்ராம் ஆகியோர் ஆவார்கள்.
2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதலமைச்சராக பொறுப்பில் உள்ளார். ஒடிசாவில் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒடிசாவில் கூண்டோடு ராஜினாமா!