ETV Bharat / bharat

இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம்!

author img

By

Published : Jul 5, 2022, 2:34 PM IST

இலங்கை கடற்படையினர் கைது செய்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

EAM
EAM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12 மீனவர்கள், இரண்டு மாத மீன்பிடித் தடைக் காலத்திற்குப் பிறகு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மீனவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுக்கவே இலங்கை கடற்படையினர் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசிடம் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓபிஎஸ் இந்த கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் திமுகவின் பி-டீம்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.