ஹைதராபாத்: நாட்டிலேயே முதல் முறையாக உயர் ரக சொகுசு கார்களை வாடகை தரும் புதிய சேவை, ஜிஎம்ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக ஹைதராபாத் விமான நிலையத்தை இயக்கி வரும் ஏர்போர்ட் ஆபரேட்டரான ஜிஎம்ஆர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஹைதராபாத் விமான நிலையத்தில் உயர் ரக சொகுசு கார்கள் வாடகைக்கு விடப்படும். விமான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு இந்த சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து செல்லலாம்.
ஒட்டுனருடனும், ஒட்டுநர் இல்லாமலும் வண்டியை எடுத்துச் செல்லும் வசதியுடன் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலமாக இதற்கான புக்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
போர்சி 911, கரெரா 4எஸ், ஜாக்குவார் எஃப் டைப், லம்போர்கினி கலார்டோ, லெக்சஸ் ஈஎஸ் 300எஸ், ஆடி ஏ3 கப்ரியோலெட், மெர்சடிஸ் பென்ஸ் ஈ 250, பிஎம்டபில்யூ 3ஜிடி, பிஎம்டபில்யூ 7 சீரிஸ், ஃபோர்ட் முஸ்டாங், வால்வோ எஸ் 60, மசெராடி ஜிகிப்லி, டெயாட்டா ஃபார்ட்யூனர், மாருது சுஷூகி சியாஸ் உள்ளிட்ட உயர் ரக சொகுசு கார்களை தொலைபேசி அழைப்பு மூலம் புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுநருடன் 40 கி.மீ. வரை பயணம் மேற்கொள்ள ரூ. 1, 999 முதல் கார்கள் சேவை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும் - போயிங் நிறுவனம்