ETV Bharat / bharat

கேரளாவில் திருமண உறவுகள் 'Use and Throw' கலாசாரம் போல் உள்ளது - வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம்

தற்போது கேரளாவில் திருமண உறவுகள் 'Use and Throw' கலாசாரமாக மாறிவிட்டது என ஓர் விவாகரத்து வழக்கை விசாரித்த கொச்சி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் திருமண உறவுகள் ‘Use and throw' கலாசாரம் போல் உள்ளது - உயர்நீதிமன்றம்

author img

By

Published : Sep 1, 2022, 9:48 PM IST

கொச்சி: கேரளாவில் அதிகரித்து வரும் ‘லிவ்-இன்’, சிறிய பிரச்னைகளுக்கு எல்லாம் விவாகரத்து கோருதல் போன்ற நடைமுறைகள் திருமண உறவுகள் ‘Use and Throw’ கலாசாரமாக மாறி வருவதைக்காட்டுகிறது என கொச்சி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணமாகி ஒன்பது ஆண்டுகளான ஒருவர் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டு விலக, விவாகரத்து கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகமது முஸ்தக் மற்றும் சோபி தாமஸ் அதை நிராகரித்தனர்.

மேலும், திருமணம் மீறிய ஓர் உறவில் ஈடுபட்டு வரும் அந்த நபர், தன் மனைவி மற்றும் குழந்தைகளை விலகி, அந்தப் புனிதமற்ற உறவில் நீடிக்க நீதிமன்றம் உதவி செய்யாது எனவும் தெரிவித்துள்ளனர். தன் தரப்பு வாதத்தை அந்த நபர் வைக்கையில், “2009இல் திருமணமாகி 2018வரை எங்கள் திருமண வாழ்க்கை சுமுகமாகத் தான் போனது.

அதன்பிறகு என் மனைவி என்னுடன் பல தகராறுகளில் ஈடுபடத் தொடங்கினார். நான் வேறொரு உறவில் இருப்பதாக சந்தேகித்தார்” என்றார். அதை ஏற்காத நீதிபதிகள், 'திருமண வாழ்வில் சகஜமாக ஏற்படும் சண்டைகள் எல்லாம் விவாகரத்திற்கு காரணங்களாக நீதிமன்றம் ஏற்காது' எனக் கூறி, அவரின் கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பளித்தனர். மேலும், தன் கணவர் திரும்பித் தன்னிடம் மனம்மாறி வந்தாலும், தான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் அவரின் மனைவி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயமாலா உட்பட 8 யானைகளை மீட்க தமிழ்நாடு வருகை தரும் அஸ்ஸாம் வனத்துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.