அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வாய்ப்புள்ளதா எனக் கேட்டு மாநிலத் தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார் எழுதிய கடிதத்திற்கு மாநில தலைமைச் செயலர் நிலம் சௌனி பதிலளித்துள்ளார்.
அதில், ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசு ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுப்பின் அது நிச்சயம் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்படும்.
ஆந்திரா மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் பாதிப்பின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் கட்டுப்பாட்டு மையங்களின் மேல் தங்களது முழு கவனத்தையும் செலுத்திவருகின்றனர்.
அதுமட்டுமின்றி, குளிர்காலம் தொடங்கவுள்ளதால் மக்களை தொற்றிலிருந்து காப்பது தொடர்பாக மத்திய அரசும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
எனவே, தற்போது உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகள் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை செயலி மூலம் கண்காணிக்கும் ஆந்திரா!