ETV Bharat / bharat

'அகில் கோகோய்க்கு இப்போது பிணை வழங்க முடியாது' - உச்ச நீதிமன்றம்! - குடியுரிமை திருத்தச் சட்ட வன்முறை வழக்கு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட வன்முறை வழக்கில் கைதான அகில் கோகோயின் பிணை மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது

Akhil Gogoi
அகில் கோகோய்
author img

By

Published : Feb 11, 2021, 2:49 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அசாமில் விவசாயிகளை தூண்டிவிட்டு, வன்முறைக்கு வித்திட்டதாக, சமூக செயற்பாட்டாளர் அகில் கோகோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், அகில் கோகோயின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவ்வழக்கு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​கோகோயின் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, CAAக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அவை பயங்கரவாதத்துடன் இணைக்கப்படக்கூடாது. போராட்டத்தில் வன்முறைகள் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அந்த வன்முறைக்கு எனது கட்சிக்காரருக்கும் சம்பந்தம் இருப்பதாக எவ்விதமான ஆதாரங்களும் இல்லை" என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு பிணை வழங்க முடியாது. வேண்டுமென்றால், மற்றொரு மனுவை அவர் தாக்கல் செய்துகொள்ளலாம் என தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

ஏற்கனவே, அகில் கோகோயின் பிணை மனு கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.