புதுச்சேரி: இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,362 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர் உயிரிழந்தனர். 9,620 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,98,095 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 178 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக புதுச்சேரியில் நேற்று ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலை தொடர புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களும் கரோனா தடுப்பு முறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது தவணைகளாக தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுதல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென்று சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார் மற்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காதலுக்காக கர்நாடகா சென்ற அமைச்சர் சேகர் பாபுவின் மகள்!