ETV Bharat / bharat

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: அலட்சியம் காட்டும் மத்திய அரசு - தேஜஸ்வி யாதவ் - அலட்சியம் காட்டும் மத்திய அரசு

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், இவ்விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதாக, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
author img

By

Published : Mar 5, 2023, 10:05 PM IST

பாட்னா: தமிழ்நாட்டில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்துவதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 அதிகாரிகள் கொண்ட குழு தமிழ்நாடு வந்துள்ளது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், "அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளது. அவர்களது அறிக்கைக்காக காத்திருக்கிறேன். பீகாரில் ஒருசிலர் தவறாக நடந்து கொண்டால் ஒட்டுமொத்த மாநிலத்தையும் எதிராக பார்க்கக் கூடாது. இதேபோலத்தான் நாம் தமிழ்நாட்டையும் கருத வேண்டும்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என அம்மாநில டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து சட்டமன்றத்தில் நான் விளக்கம் அளித்தேன். இவ்விவாகரத்தில் முதற்கட்ட தகவலைப் பெறுவதற்காகத்தான் அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம். பீகாரை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சி பாஜக. மத்தியில் அவர்கள் தலைமையிலான ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இவ்விவகாரம் குறித்து பாஜக அலட்சியம் காட்டி வருகிறது. இச்சம்பவத்தில் எந்த தலையீடும் இன்றி அக்கறை இல்லாமல் உள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என அம்மாநில பாஜக தலைவர், பீகார் பாஜக தலைவரிடம் தொலைபேசியில் உரையாடியது குறித்து நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது" என்று கூறினார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக திருப்பூரில் செயல்படும் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

மேலும், திருப்பூரில் ரயில் விபத்தில் பீகார் தொழிலாளர் உயிரிழந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் வதந்தி பரவியது. இது வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அச்சம் அடைந்த வடமாநிலத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் எச்சரித்தனர். மேலும், வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: போலிச் செய்தி சர்ச்சை: ஏசியா நெட் அலுவலகத்தில் போலீசார் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.