ETV Bharat / bharat

பீகார் ரயில் விபத்து; 4 பேர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - today latest news

Bihar train accident: பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bihar train accident
பீகார் அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு.. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்..
author img

By ANI

Published : Oct 12, 2023, 7:43 AM IST

பீகார்: டெல்லி ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யாவுக்கு வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது, கிழக்கு மத்திய ரயில்வேயின் டானாபூர் கோட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று (அக்.11) இரவு 09.35 மணியளவில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டது.

  • #WATCH | Bihar: Visuals from the Raghunathpur station in Buxar, where 21 coaches of the North East Express train derailed last night

    Restoration work is underway. pic.twitter.com/xcbXyA2MyG

    — ANI (@ANI) October 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த விபத்தில் சுமார் 50 பேர் படுகாயமடைந்ததாக உள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது என்று கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) பிரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து நடைபெற்றுள்ள பக்சர் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் மாநில மற்றும் தேசிய மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில் தடம் புரண்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாது, வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மீட்புப் பணிகள் முடிவடைந்த பிறகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் கிழக்கு மத்திய ரயில்வேயின் (ECR) பொது மேலாளர் தருண் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவரது 'X' வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தார். அதில், "மீட்புப் பணிகள் முடிந்தது. அனைத்து பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டன. பயணிகள், அவர்களின் பயணத்திற்காக விரைவில் சிறப்பு ரயிலுக்கு மாற்றப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

  • Evacuation and rescue complete. All coaches checked.
    Passengers will be shifted to a special train soon for onward journey.

    — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட செய்தி எனக்கு கிடைத்தது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருகிறோம்" என்று தனது 'X' வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • I have received the news of the derailment of North East Express 12506 - from Anand Vihar to Kamakhya.

    We are closely monitoring the situation and are establishing contact with local authorities and other agencies. @AshwiniVaishnaw @RailMinIndia

    — Himanta Biswa Sarma (@himantabiswa) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, கடந்த ஜூன் 20ஆம் தேதி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மற்றும் SMVT பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களும் மோதிய விபத்தில் 176 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 451 பேர் காயங்களுடனும் 180 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றனர். 296 உயிர்களைக் கொன்ற இந்த விபத்தின் தடம் மறைவதற்கு முன்னர், நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த பீகார் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மெய்தி, குக்கி சமூக இளைஞர்கள் இணைந்து கால்பந்தாட்டம்.. மணிப்பூரில் அமைதி வேண்டும் என கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.