டெல்லி: நாடு முழுவது காரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜன 14) ஒரே நாளில் தேசிய தலைநகரமான டெல்லியில் தினசரி கரோனா பாதிப்பு 31 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு நேற்று (ஜன 14) இரவு 10 மணி அளவில் தொடங்கியது. இந்த ஊரடங்கு ஜனவரி 17ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால் அடுத்த 55 மணி நேரத்திர்கு டெல்லியில் அத்தியாவசியமற்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் - மூன்று வீரர்கள் காயம்