நாட்டின் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். தனியார் அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், "எந்தவித தட்டுப்பாடும் நாட்டில் நிலவவில்லை.
அடுத்த நான்கு நாள்களில் அனைத்து சிக்கலுக்கும் தீர்வு காணப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் உறுதியளித்துள்ளார். எனவே, தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சத் தேவையில்லை.
மின் உபரி கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அரசு பல்நோக்கு மின் உற்பத்தித் திட்டத்தை முன்னெடுத்துவருகிறது. மாற்று மின் உற்பத்தி திறனை உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் குறித்து அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற அளவில் உள்கட்டமைப்பு வசதியை அரசு மேம்படுத்தியதால் தடுப்பூசித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி