புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சி தலைவர் ரெங்கசாமி, “புதுச்சேரி மாநில மக்களுக்காக காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. சரியாக செயல்படவில்லை. அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களாகவேதான் ராஜினாமா செய்தனர். எக்களுக்கு அதில் எந்த பங்குமில்லை. அரசு சரியாக இருந்திருந்தால் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர்களே ஏன் வெளியேறுகிறார்கள்.
இந்த அரசு வேலைவாய்ப்பை யாருக்கும் ஏற்படுத்தித் தரவில்லை. பல சந்தர்ப்பங்களில் அரசியல் நாகரிகமற்று முதலமைச்சர் நடந்து கொண்டார். ஒரு மாநில முதலமைச்சர் எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு நாராயணசாமி தான் எடுத்துக்காட்டு. வரும் சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்” என்றார்.
அப்போது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, அதிமுக மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நாராயணசாமி ராஜினாமா: கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி