திருவனந்தபுரம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்தியா இலங்கைக்கு எப்போதும் உதவியாகவும் ஆதரவாகவும் உள்ளது. இப்போதைக்கு இலங்கையிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலை அதிகமாக காணப்படவில்லை என்றார்.
கேரளாவில் உள்ள பாஜகவினருடன் நேரத்தை செலவிட வந்துள்ளேன். அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள், நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவே வந்தேன். தென் மாநிலங்களில் மட்டுமல்ல நாடு முழுவதும் பாஜகவுக்கு வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. அனைத்து பகுதிகளிலும் வாய்ப்புகளை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:’சூடு, சொரணை இருந்தால் முனுசாமி இப்படி எல்லாம் பேச மாட்டார்’- கோவை செல்வராஜ்