வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்கள் ட்வீட் செய்ததையடுத்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை என சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், கங்கனா ரணாவத், அக்ஷய் குமார் போன்ற திரைப் பிரபலங்களும் ட்வீட் செய்திருந்தனர்.
இதுபெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரபலங்கள் ட்வீட்கள் பதிவான நேரம், ஒருங்கிணைந்த பாணி ஆகியவற்றை வைத்து பார்த்தால் இதெல்லாம் திட்டமிட்டது போல் தெரிகிறது என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றச்சாட்டியது மட்டுமின்றி விசாரணை நடத்திட புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்திருந்தார்.
சச்சின் மீது விசாரணை நடத்தப்படுமா என்பதற்கு உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் சாகன் புஜ்பால் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "விவசாயிகள் ட்வீட் குறித்த விவகாரத்தில் பாரத ரத்னா விருது பெறும் சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கரின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தப்பட மாட்டாது. அவர்களிடம், ட்வீட் தொடர்பாகத் தகவல் மட்டுமே கேட்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மனு!