கர்நாடகா: கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று (ஏப்.30) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாகவும், அதனால் பத்து நாட்களில் அதிகளவில் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகிறது. இது தவறு. மத்திய அரசு நாள்தோறும் 1.7 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகித்து வருகிறது.
இம்மாதம் நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ளதால், விரைவாக விநியோகம் செய்ய ரயில்வே துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் போதுமான அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளது. அனல்மின் நிலையங்களில் 21.55 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. கோல் இந்தியா மற்றும் பல நிறுவனங்களிடம் 72 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. அதனால் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'காரணம் கூறாமல் தீர்வு காணுங்கள்' - உபி அரசை சாடிய அகிலேஷ்!