நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, உத்தரப் பிரதேசம் தலைநகர் லக்னோவில் வார ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை, அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி முதல் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருவிழாக் காலம் என்பதால் இந்த வாரம் நவம்பர் 15 முதல் 17 வரை வார ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.