ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்தின் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் இணையம் துண்டிக்கப்படுவதாகவும் அல்லது இணையத்தின் வேகம் குறைந்த அளவிலே இருக்கும் எனவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் இணையத்தில் பரவும் வதந்திக்கு காஷ்மீர் ஐ.ஜி விஜயகுமார், முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "காஷ்மீரில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறும் சமயத்தில் இணைய முடக்கம் அல்லது வேகத்தை குறைத்தல் போன்ற எதுவும் இருக்காது" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை