புதுச்சேரி மாநிலத்தில் முழு ஊரடங்கு இல்லை, ஏற்கனவே உள்ள நடைமுறை 31ஆம் தேதி வரை தொடரும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (மே.31)ஆம் தேதி வரை நீடிக்கும்.
அதாவது, புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள ஊரடங்கு நடைமுறை தொடரும். மேலும் அடுத்து வரும் நாட்களில் கரோனா சார்ந்த நிலைமையைப் பொறுத்து இந்த முடிவுகளில் மறு ஆய்வு செய்யப்படும்.
பொதுமக்கள் நலன் கருதியும், நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி உண்ண வேண்டும் என்ற அடிப்படையில், புதுச்சேரியில், தினசரி மதியம் 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்கக் கூடிய கடைகள் மட்டும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது' என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் மாளிகை தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: யாஷ் புயலை எதிர்கொள்ளத் தயாராகும் ஒடிசா, மேற்கு வங்கம்!