ETV Bharat / bharat

கருணை அடிப்படையில் பணி: வளர்ப்பு மகனின் மனுவை பரிசீலிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு - குழந்தைகளுக்கு இடையே வேறுபாடு இல்லை

கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி வளர்ப்பு மகன் தொடர்ந்த மனுவை பரிசீலிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றம்
author img

By

Published : Nov 22, 2022, 2:32 PM IST

கர்நாடகா: பனஹட்டி, ஜேஎம்எஃப்சியில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் விநாயக் எம் முட்டாட்டி என்பவர் ஊழியராக இருந்தார். இவர் 2011 இல் சிறுவனை தத்தெடுத்தார். முட்டாட்டி மார்ச் 2018 இல் இறந்தார். அதே ஆண்டு, அவரது வளர்ப்பு மகன் கிரீஷ் கருணை அடிப்படையில் வேலை கோரி மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்தவர் வளர்ப்பு மகன் என்பதாலும், கருணை நியமனத்திற்கு தத்தெடுக்கப்பட்ட மகனை பரிசீலிக்க விதிகள் வழங்கவில்லை என்பதாலும் அந்த மனு அத்துறையால் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கிரீஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2021 ஆம் ஆண்டு தனி நீதிபதியும் அவரது மனுவை நிராகரித்தார். இதையடுத்து கிரீஷ் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையில், ஏப்ரல் 2021 இல் தத்து, பெற்றேடுத்த குழந்தைகளுக்கு இடையிலான வேறுபாட்டை நீக்கி விதிகள் திருத்தப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் நீதிபதி முன் கிரிஷ் தரப்பு வழக்கறிஞர், 2021இல் செய்யப்பட்ட திருத்தம் தனி நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். 2021 இல் திருத்தம் செய்யப்பட்டதாலும், 2018 இல் கிரிஷ் தனது கோரிக்கையை முன்வைத்ததாலும், அடுத்தடுத்த திருத்தத்தின் பலனை அவருக்கு வழங்க முடியாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

கருணை நியமனம் கோரி வளர்ப்பு மகன் செய்த விண்ணப்பம் நேர்மையானது என்றும், குடும்பம் எதிர்கொள்ளும் சிரமங்களின் பின்னணியில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து கருணை நியமனம் கோரி மனுதாரர் சமர்ப்பித்த மனுவை பரிசீலிக்குமாறு, சம்பந்தப்பட்ட துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தெம்மாடிக் காத்து ரீல்ஸ்: மன்னிப்பு கேட்ட பாய்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.