டெல்லி: மருத்துவமனை சிகிச்சை, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்ற சேவைகள் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இல்லையெனில் கரோனா தொடர்பான சேவைகள் மறுக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து வேறேதேனும் ஆவணங்களை காட்டி அவசர காலத்தில் பொது மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என ஆணையம் தெரிவித்திருக்கிறது.
எனவே, கரோனா மற்றும் அரசு தொடர்பான சேவைகளுக்கு ஆதார் அவசியம் என்று கூறினால், துறைசார் உயர் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.