ETV Bharat / bharat

பெகாசஸ் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளையும் விசாரணை! - விசாரணை

பெகாசஸ் மென்பொருள் வாயிலாக வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

SC
SC
author img

By

Published : Aug 16, 2021, 8:26 PM IST

டெல்லி : பெகாசஸ் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பெகாசஸ் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது, இவ்விவகாரத்தில் எழுத்து பூர்வமாக பதில் அளித்தால் மனுதாரர்கள் தங்களின் மனுவை திரும்ப பெறுவார்களா?” என மனுதாரர்களின் வழக்குரைஞர்களிடம் கேட்டார்.

இஸ்ரேல் நாட்டின் தனியார் மென்பொருள் நிறுவனம் பெகாசஸ். இந்நிறுவனத்தின் மென்பொருள் வாயிலாக ஒன்றிய அமைச்சர், நீதிபதிகள், ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என 300 பேர் வேவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

பெகாசஸ் வலையில் நீதிபதி அருண் மிஸ்ரா!

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் உள்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் திங்கள்கிழமை (ஆக.16) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சூர்ய காந்த், அனிருத்த போஸ் உள்ளிட்டோரும் இருந்தனர்.

SUPREME COURT
பெகாசஸ்

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், “பெகாசஸ் மென்பொருள் வாயிலாக வேவு பார்க்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பெகாசஸ் மென்பொருளை அரசு அல்லது அரசு நிறுவனம் எதுவும் பயன்படுத்தியதா? என்பது குறித்து பதிலளிக்கவில்லை” என்றனர்.

பெகாசஸ் வாடிக்கையாளர் யார்- ப.சிதம்பரம்

இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

மேலும், “மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால், மனுதாரர்கள் வழக்கை திரும்ப பெறுவார்களா? என்றும் கேட்டார். இதற்கிடையில் மனுதாரர்கள், “பெகாசஸ் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் மிகப்பெரியது. மேலும் தனிநபர்களுக்கு அப்பாற்பட்டது. பெகாசஸ் மூலம் ஊடகம் மற்றும் நீதித்துறை குறிவைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது.

டெலிபோன் ஒட்டுக்கேட்பு- மோடி அரசுக்கு சு.சுவாமி எச்சரிக்கை!

பெகாசஸ் மென்பொருளை அரசு பயன்படுத்துவதை ஏற்றுகொண்டால் அதன் வாதம் ஒருவிதமாக இருக்கும். அதே பயன்படுத்தவில்லையென்றால் அவர்களின் வாதம் வேறுவிதமாக இருக்கும். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை பதிவு செய்ய வேண்டும்” என்றனர்.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பெகாசஸ் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செவ்வாய்க்கிழமையும் (ஆக.17) உச்ச நீதிமன்றத்தில் தொடர்கிறது.

இதையும் படிங்க : இத்தனை ஆபத்தானதா இஸ்ரேலின் பெகாசஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.