இஸ்லாமிய மக்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஹஜ் புனித பயணம் குறித்து ஒன்றிய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தகவல் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று காரணமாக, கடந்தாண்டு ஹஜ் பயணம் ரத்தான நிலையில், இந்தாண்டு ஹஜ் பயணம் குறித்து இந்திய அரசின் முடிவு சௌதி அரேபிய அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே அமையும் என, அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு வெளிநாட்டு பயணிகளுக்கு சௌதி அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்தாண்டும் அந்நாட்டின் அரசின் முடிவை மதித்தே இந்தியாவும் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புனித மெக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் இஸ்லாமிய மக்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்தியாவிலிருந்து மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’இஸ்லாமிய நாடுகளிடம் காஷ்மீர் விவகாரத்தை முன் வைப்போம்’ - பாகிஸ்தான் அரசு