ETV Bharat / bharat

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை - சீதாராம் யெச்சூரி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் வார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி
author img

By

Published : Dec 26, 2020, 1:36 PM IST

டெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்ற மத்திய பாஜக அரசின் வார்த்தைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

நேற்று (டிச.25) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீதாராம் யெச்சூரி, "பிரதமரின் சொற்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. முறையான விவாதமின்றி வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை விடுவித்து, குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான உத்திரவாதத்தை மத்திய அரசு மறைத்துவருகிறது.

  • There is no confidence in Modi government’s assurances for discussions with farmers since these bills were passed without any prior discussion and by preventing a vote in the House. No confidence in whatever they say. (1/n)

    — Sitaram Yechury (@SitaramYechury) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் ஏபிஎம்சி மண்டி அமைப்பு முறை ரத்துசெய்யப்படும் என்ற அச்சம் நிலவிவரும் நிலையில், இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி கேரளாவில் மண்டி அமைப்பு முறை இல்லை. அங்கு இதுதொடர்பான போராட்டங்களும் இல்லை என்று கூறினார்.

  • PM claimed that they are implementing an MSP 50% over input costs - a complete untruth. Swaminathan Commission recommended C2 + 50% as MSP, government at best gives A2 + 50%, at least 30% less! (n/n)

ஆனால் அம்மாநிலத்தில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. புதிய வேளாண் சட்டங்களை நிராகரிக்கச் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென அம்மாநில அரசு திட்டமிட்டது. ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது அரசியலமைப்புக்கு எதிரானது.

உற்பத்தி விலையைவிட 50 விழுக்காடு அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்தச் சட்டங்கள் உறுதிசெய்துள்ளதாக பிரதமர் கூறுவது முழுக்க முழுக்கப் பொய்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றால் போராடுவோம் - கிசான் சேனா எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.