டெல்லி : 2022-23ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை (budget 2022) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக வரி விதிப்பு எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், வங்கி, கல்வி, ராணுவம், வணிகம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்ஜெட்டை வரவேற்றுள்ள நிதின் கட்கரி, “நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில் விவசாயம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக எனது துறை சார்ந்த திட்டங்களில் பர்வத் மாலா (Parvat Mala) திட்டம் மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு. இந்தத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜன.31ஆம் தேதி வெளியானது. அதில், நடப்பாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8 முதல் 8.5 விழுக்காடு வரை வளர்ச்சிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க : 2025ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் - நிதின் கட்கரி