பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் பங்கேற்ற காணொலிக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் இந்தாண்டு சவூதி அரேபியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் பலன்கள், உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை ஊக்குவிக்க டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல், புதிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினர்களை (New Development Bank BRICS) இணைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை ஊக்குவிக்க டிஜிட்டல் தளத்தை உருவாக்கும் ரஷ்யாவின் முயற்சி குறித்து, இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்ட ஜி 20 மாநாட்டில், குறிப்பிடத்தக்க திட்டங்களை ஜி20 மாநாடு அறிவித்ததை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் வரிவிதிப்பு பிரச்னைக்குத் தீர்வு காண சர்வதேச முயற்சிகள் எடுப்பது குறித்தும் நிதியமைச்சர் கூறினார். வரி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் ஒருமித்த தீர்வு முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில், புதிய வளர்ச்சி வங்கி (என்டிபி)யில் வேறு பிராந்தியங்களின் நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்க்க நிர்மலா சீதாராமன் ஆதரவு தெரிவித்த நிலையில், இது குறித்து நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் விவாதம் மேற்கொண்டனர். ஒருங்கிணைந்த டிஜிட்டல் இயங்குதளத்தை (டேட்டா ரூம்) உருவாக்க ரஷ்யா முயன்று வருவது குறித்த தனது கருத்தையும் அவர் இக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.
நிதியமைச்சர்களின் முதல் பிரிக்ஸ் கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வரலாறு: முதலீட்டாளர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் லாபம்!