ETV Bharat / bharat

தேர்வு தோல்வியால் விரக்தி - ஆந்திராவில் 9 மாணவர்கள் தற்கொலை!

ஆந்திராவில் இடைநிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Andra
Andra
author img

By

Published : Apr 29, 2023, 2:35 PM IST

அமராவதி : ஆந்திர பிரதேசத்தில் உயர்நிலை படிப்புகள் எனக் கூறப்படும் இடைநிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில், 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முயன்ற இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் இடைநிலைத் தேர்வுகள் எனக் கூறப்படும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி இருந்தனர். இந்த நிலையில், ஆந்திர பள்ளிக் கல்வித் துறை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், 11-ம் வகுப்பில் 61 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். உயிரிழந்த மாணவர்கள் ஸ்ரீகாகுளம், சித்தூர், விசாகப்பட்டணம், அனந்தபூர், என்.டி.ஆர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம், தண்டு கோபாலபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், பிளஸ் 1 தேர்வில் பல பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் விசாகப்பட்டிணம் மாவட்டம் திரிநாதபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ் 1 தேர்வில் சில பாடங்களில் தோல்வியடைந்ததால் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளாது. அதே மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், மாணவி ஆகியோர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளது. மேலும், அனகாபள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பிளஸ் 1 தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஷாகா பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவர் இரண்டாவது முறையாக தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளது. விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக பெற்றோர் திட்டியதாக கூறி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்த பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

இதையும் படிங்க : BYJU'S : பைஜூஸ் சிஇஓ வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு - வெளிநாட்டு முதலீட்டில் முறைகேடு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.