ஜம்மு காஷ்மீர்: ஜம்முவின் சம்பா மாவட்டத்தின் எல்லையை பாதுகாக்கும் நோக்கிலும், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பாகவும் மாவட்ட நிலைக்குழுவின் கூட்டம் பிஎஸ்எப் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் பிறகு பேசிய சம்பா மாவட்டத்தின் துணை கமிஷனர் அனுராதா குப்தா, “மாவட்ட நிர்வாகத்தால் உணரப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் ஒழுங்குபடுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது பயங்கரவாதிகளின் செயல்களை கட்டுக்குள் கொண்டு வர உதவும். மேலும் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் 1 கிலோ மீட்டர் வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை எந்த நபரும் அல்லது குழுவும் நடமாடக் கூடாது. அத்தியாவசியமான பயணம் என்றால், குறிப்பிட்ட நபர் அல்லது குழு, தங்களுக்குரிய அடையாள அட்டைகளை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 21 வயது இளம்பெண் ஐ.சி.சி.யின் பயிற்சியாளராக தேர்வாகி சாதனை!