ETV Bharat / bharat

உ.பி.யின் முக்கிய நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கம் - இரவு ஊரடங்கு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களான லக்னோ, வாரணாசி, கான்பூரில் இன்றுமுதல் (ஏப். 8) இரவு நேர பொதுமுடக்கம் உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

night-curfew-imposed-in-lucknow
night-curfew-imposed-in-lucknow
author img

By

Published : Apr 8, 2021, 6:42 AM IST

Updated : Apr 8, 2021, 8:59 AM IST

அண்மைக் காலமாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவருகிறது. அதன் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளில் மீண்டும் கவனம் செலுத்திவருகின்றன.

அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் இரவு நேர பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களான லக்னோ, வாரணாசி, கான்பூரில் இன்றுமுதல் (ஏப். 8) இரவு நேர பொதுமுடக்கம் உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தப் பொதுமுடக்கம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீடிக்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா இரண்டாவது அலை... குஜராத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

Last Updated : Apr 8, 2021, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.