டெல்லி: பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மே 29ஆம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன் காரணமாகவே சித்து சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் இன்று (செப்-11) டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சித்து மூஸ் வாலா கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்திய தீபக் முண்டி மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் இந்திய - நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தில் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய 23-வது குற்றவாளியை பஞ்சாப் போலீஸார் நேற்று(செப்-11) கைது செய்தனர்.
குற்றவாளிகள் நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மற்ற இருவர் கபில் பண்டிட் மற்றும் ஜோக்கர் என்கிற ராஜிந்தர் ஆவர். பஞ்சாப் காவல்துறையின் அதிரடிப் படை (ஏஜிடிஎஃப்) டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அமைப்புகளுடன் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது.
இதனிடையே மூஸ்வல கொலை வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் வெளிநாட்டில் இருப்பதாகவும், ஆறு பேர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பாடகர் சித்து மூஸ் வாலா கொலையில் சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை