கொல்கத்தா (மேற்கு வங்கம்): சாரிபுல் இஸ்லாம் (34) என்னும் அந்நபர் கைது செய்யப்பட்ட பிறகு கொல்கத்தாவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேற்கு வங்கத்தில், மல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாம் கடந்த 2019ஆம் ஆண்டு போலி நோட்டு அச்சிடும் வழக்கில் தேடப்பட்டு வந்தார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான அலம், தௌசிஃப் அலம், ஹானவாஜ் அன்சாரி ஆகியோர் மீது என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இந்த நபர்கள் அனைவரும் போலி நோட்டு தயாரிக்கும் மோசடி கும்பலில் இருந்தனர்.
இவர்கள் வங்கதேசத்தில் இருந்து போலி இந்திய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுவந்தனர். தௌசிஃப் அலமிடமிருந்து போலி நோட்டுகளைப் பெற்று அன்சாரியிடம் கொடுத்துள்ளார்" என்றார்.
விசாரணையில், எல்லை தாண்டி தொடர்புகள் கொண்டிருந்த இஸ்லாம், பண சரக்கை பெற்று தௌசிஃப் அலமிடம் கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதையும் படிங்க: மீண்டும் பள்ளிகள் திறப்பு? ஐ.சி.எம்.ஆர். முக்கியத் தகவல்