ETV Bharat / bharat

105 மணி நேரத்தில் 75 கி.மீ சாலை: நெடுஞ்சாலைத்துறை கின்னஸ் சாதனை! - நெடுஞ்சாலைத்துறை புதிய கின்னல் சாதனை

மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி - அகோலா மாவட்டங்களுக்கு இடையே 75 கி.மீ சாலையை வெறும் 105 மணி நேரத்தில் அமைத்து நெடுஞ்சாலைத்துறை கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை கின்னல் சாதனை
நெடுஞ்சாலைத்துறை கின்னல் சாதனை
author img

By

Published : Jun 8, 2022, 11:01 PM IST

டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குறைந்த நேரத்தில் சாலை அமைத்து கின்னஸ் சாதனை புரியும் முயற்சியை நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி -அகோலா மாவட்டங்களுக்கு இடையே 75 கி.மீ சாலையை வெறும் 105 மணி நேரத்தில் அமைத்து நெடுஞ்சாலைத்துறை கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "அமராவதி -அகோலா மாவட்டங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை 75 கி.மீ தூரம் வெறும் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஜூன் 3ஆம் தேதி காலை 7.27 மணிக்கு தொடங்கி நேற்று ஜுன் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் தரமான சாலை அமைத்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்த அனைத்து பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள், தொழிலாளர்கள், ராஜ் பாத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், "இந்த புதிய சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் சாலையாகும். இதன் மூலம் இந்த பகுதிகளுக்கு செல்லும் பயண நேரம், வாகன நெரிசல் குறையும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.100 உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.