ETV Bharat / bharat

நாட்டிலேயே முதல்முறையாக பல்கலைக்கழகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை! - கல்வி நிறுவனத்தில் முதன்முறை

காந்திநகர்: குஜராத் மாநிலத்திலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில், கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நாட்டிலேயே கல்வி நிறுவனத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

நாட்டிலே முதன்முறையாக இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையம்!

author img

By

Published : Jun 13, 2021, 3:44 PM IST

இதுதொடர்பாக, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக இயக்குநர் ஜுனாரா நேற்று (ஜூன்.12) ஈடிவி பாரத்திடம் கூறுகையில்," நாட்டில் கல்வி நிறுவனத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது இதுவே முதல்முறை.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர், இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வளாகத்திலே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு 180 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 4,200 மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 175 பேருக்கு, அவ்வப்போது வளாகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்த பல்கலைக்கழகங்கள் சிரமப்பட்டபோது, இங்கு பயிலும் மாணவர்களுக்கு வளாகத்திலேயே தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதற்கு இவ்வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை மிகவும் உதவியாக இருந்தது. மேலும் மாநில அரசுக்கு உதவும் வகையில் நாள்தோறும் 100 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்யப்படுகிறது.

சுகாதாரத்துறை அறிக்கையின்படி, குஜராத் மாநிலத்தில் நேற்று 490 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது. ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 1,278 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.