ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.

newstoday
newstoday
author img

By

Published : Jan 15, 2021, 6:59 AM IST

இன்று மாட்டுப் பொங்கல்:

பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் சூரியனை வழிபடும் விதமாக தை முதல் நாளில் தைப் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாள் மாட்டுப்பொங்கல் விழாவாக கொண்டாடப்படும். விவசாயத் தொழிலில் விவசாயிகளுக்கு துணை நிற்பவை கால்நடைகள். அவ்வகையில் தங்கள் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் உதவும் கால்நடைகளைச் சிறப்பித்து வழிபாடு செய்யும் விதமாக, 'மாட்டுப் பொங்கல்' இன்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரால் கொண்டாடப்படுகிறது.

மாட்டு பொங்கல்
மாட்டுப் பொங்கல்

முதலமைச்சர் பழனிசாமி இன்று மதுரை வருகை!

ஜல்லிக்கட்டு, கரோனா தடுப்பூசி தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்றிரவு (ஜன.,15) முதலமைச்சர் பழனிசாமி மதுரை வருகிறார். சேலத்தில் இருந்து கிளம்பி இரவு 10:00 மணிக்கு மதுரைக்கு காரில் வருகிறார். சர்க்கியூட் ஹவுஸில் தங்குகிறார். நாளை காலை 8:00 மணிக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். இதில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பங்கேற்கிறார். காலை 9:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் சென்று, கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழ்நாட்டு வீரர்கள் அறிமுகம்!

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராஃபி தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டி 'டிரா' ஆனது. தற்போது தொடர் 1-1 என சமனில் உள்ளது. கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும், நான்காவது மற்றும் கடைசிப்போட்டி இன்று(ஜனவரி 15) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த அஷ்வின், பும்ரா, விஹாரி, ஜடேஜாவுக்குப் பதிலாக, ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை

'புலிக்குத்தி பாண்டி' இன்று நேரடியாக சன் டிவியில் ரிலீஸ்!

குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'புலிக்குத்தி பாண்டி'. கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் நேரடியாக 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிக்குத்தி பாண்டி
புலிக்குத்தி பாண்டி

ஜனவரி 15 முதல் மீண்டும் இந்திய சந்தையில் கம்பேக் கொடுக்கும் VAIO லேப்டாப்!

இன்று VAIO லேப்டாப் இந்தியாவில் மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளது. இப்போதைக்கு இதன் விற்பனை பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலர் கலரான வண்ணங்களில், மெல்லிய வடிவமைப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய லேப்டாப் சந்தையில் ஹாட் சேலாகி வந்தது, VAIO. திடீரென எந்தவிதத் தகவலும் இல்லாமல் சந்தையில் இருந்து மறைந்துவிட்டது. ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் NEXSTO கம்பெனி இந்தியாவில் வயோ லேப்டாப்பைக் கொண்டுவர, ஜப்பானின் வயோ கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் இட்டுள்ளது. NEXSTO மலேஷியா, சிங்கப்பூர், தைவான் மாதிரியான நாடுகளில் வயோ லேப்டாப்பை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

VAIO லேப்டாப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.