ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

Newstoday
Newstoday
author img

By

Published : Nov 9, 2020, 6:37 AM IST

Updated : Nov 9, 2020, 6:46 AM IST

இணைய வழியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்: இன்று முதல் தொடக்கம்!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் இலவச நீட் பயற்சி வகுப்புகள் இணைய வழியில் இன்று முதல் தொடங்கவுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 14 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

நீட்
நீட்

அவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்த காரணத்தினால் அது தள்ளிவைக்கப்பட்டது.

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு!

மும்பையில் செயல்பட்டுவரும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அலுவலகம் மற்றும் ஸ்டுடியோ வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் கான்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்வே நாயக், அவரின் தாயார் ஆகியோர் ராய்காட் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார்கள்.

அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி

அவரின் தற்கொலைக் குறிப்பில், தனது தற்கொலைக்கு காரணம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிதான் காரணம் எனப் பெயரை குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். அவருடன் சேர்த்து ஃபெரோஸ் ஷாயிக், நிதீஷ் சர்தா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர், இவர்கள் மூவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் கைதை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் மூன்று பேரும் ஜாமின் மனு தாக்கல்செய்தனர். இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை சார்பாக அலிபக் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

மகளிர் டி20 சேலஞ்ச்: சூப்பர்நோவாஸ் - டிரெய்ல்பிளேசர்ஸ் இன்று பலப்பரீட்சை!

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில், சூப்பர்நோவாஸ் - டிரெய்ல்பிளேசர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் விறுவிறுப்புக்கு இப்போட்டியில் குறைவிருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

மகளிர் டி20 சேலஞ்ச்
மகளிர் டி20 சேலஞ்ச்

ஓடிடி தளத்தில் இன்று வெளியாகும் லக்‌ஷ்மி திரைப்படம்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லக்‌ஷ்மி திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. தமிழில் வெளியாகி ஷிட்டடித்த காஞ்சனா படத்தின் ரீமேக்கான இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

லக்‌ஷ்மி
லக்‌ஷ்மி பட போஸ்டர்

அமெரிக்காவில், நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்!

மொபைல் போன் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நோக்கியா, தனது புதிய ஸ்மார்ட்போனை அமெரிக்க சந்தையில் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நோக்கியா

Last Updated : Nov 9, 2020, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.